ஓவர் பில்டப் கொடுக்கும் புதுமுக நடிகை

சமீபத்தில் வெளியான படத்தில் பள்ளி மாணவியாக நடித்த நடிகைக்கு ரசிகர்கள் அதிகமாக கிடைத்து விட்டார்களாம்.

சமீபத்தில் வெளியான படத்தில் பள்ளி மாணவியாக நடித்த நடிகைக்கு ரசிகர்கள் அதிகமாக கிடைத்து விட்டார்களாம். முதல் படத்திலேயே பலருடைய பாராட்டை பெற்றதால் நடிகைக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய ஆரம்பமானதாம்.

பல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் நடிகைக்கு போன் செய்து கதை சொல்லட்டுமா என்று கேட்கிறார்களாம். ஆனால், நடிகையோ, ஓவராக பில்டப் கொடுக்கிறாராம். நிறைய கதை கேட்டுட்டேன். அப்புறம் கேட்கிறேன். நேரம் இல்லை. அப்புறம் போன் செய்யுங்கள் என்று பெரிய நடிகை போல் பில்டப் கொடுக்கிறாராம்.

இவரிடம் பேசிய பலரும் இப்பவே இப்படி பேசுகிறாரே… இன்னும் இரண்டு மூன்று படங்கள் வெற்றி பெற்றால் நடிகை எப்படி பேசுவாரோ என்று புலம்பிக் கொண்டு இருக்கிறார்களாம்.

MT4 Platforms

Related Post