SHARE THIS NEWS please, THANK YOU
............................

ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும், அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்குமிடையிலான கலந்துரையாடல் நேற்றிரவு நடந்தது. கலந்துரையாடல் வெற்றிகரமாக முடிந்ததாக, சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் ஊடகங்களிடம் தெரிவித்தனர்.

அலரிமாளிகையில் நடந்த இந்த கலந்துரையாடல், நேற்று இரவுஒன் 9.30 மணியளவில் ஆரம்பித்து, 11 மணிவரை நீடித்தது.

இந்த கலந்துரையாடலில் பிரதமர் ரணில், அமைச்சர் சஜித்துடன், அமைச்சர்கள் ரஞ்சித் மத்தும பண்டார, மலிக் சமரவிக்ரம, கபீர் ஹாஷிம், ரஜித சேனரத்ன ஆகியோரும் கலந்து கொண்டனர்.

MT4 Platforms

கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் பேசிய அமைச்சர் சஜித் பிரேமதாச, இன்று நடைபெற்ற கலந்துரையாடல் மிகவும் சாதகமானது என்றும் அடுத்த இதன் முடிவை அடுத்த சில நாட்களில் அறிந்து கொள்வீர்கள் என்றும் கூறினார்.

இந்த கலந்துரையாடலில், கூட்டணி உருவாக்குவது மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தியதாக அமைச்சர் கூறினார்