SHARE THIS NEWS please, THANK YOU
............................

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவை எதிர்வரும் செப்டெம்பர் 16 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்துகம நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

அண்மையில், தோட்ட தொழிலாளியொருவரின் சடலத்தை புதைக்க தோட்ட உரிமையாளர் இடம்கொடுக்க மறுத்திருந்தார். சடலத்தை புதைக்க நீதிமன்றத்தின் மூலம் தடையுத்தரவும் பெற்றிருந்தார். அதை மீறி சடலத்தை புதைத்த விவகாரத்திலேயே பாலித விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

MT4 Platforms

பாலித தெவரபெருமவுடன் இணைந்து இறுதிச்சடங்கை நடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டில் மேலும் நால்வரும் அவருடன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.