ஏமாற்றமான முடிவு – வீரர்களின் போர்க்குணம் அருமை: மோடி கருத்து

SHARE THIS NEWS please, THANK YOU
............................


உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து அணி முன்னேறியுள்ளது. இன்று நடந்த ஆட்டத்தை பல்வேறு தரப்பினரும் எதிர்மறையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா வெற்றிபெற இயலாமல் போனது ஏமாற்றமான முடிவு என்றாலும் ஆட்டத்தின் இறுதிவரை நமது வீரர்களின் போர்க்குணம் அருமையாக இருந்தது என பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆரம்பச்சுற்று போட்டிகளில் இருந்தே பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் ஆகியவற்றில் இந்தியா சிறப்பாக விளையாடியதை எண்ணி நாம் மிகவும் பெருமைப்படுகிறோம். வெற்றிகளும் தோல்விகளும் வாழ்க்கையின் ஒருபகுதியாகும். நமது அணியினரின் எதிர்கால பெருமுயற்சிகளுக்கு மனம்நிறைந்த நல்வாழ்த்துக்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.