SHARE THIS NEWS please, THANK YOU
............................

அடுத்த ஐனாதிபதித் தேர்தலில் எந்தெந்தக் கட்சிகளில் யார் யார் வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றார்கள் என்று அறிவிக்கப்பட்ட பின்னரே தமிழ் மக்கள் கூட்டணியின் நிலைப்பாடு அறிவிக்கப்படுமெனத் தெரிவித்துள்ள கூட்டணியின் செயலாளர் நாயகமும் வடக்கு முன்னாள் முதலமைச்சருமான க.வி.விக்னேஸ்வரன், எங்களுடைய அடிப்படைப் பிரச்சனைகள் முதற்கொண்டு அரசியல் பிரச்சனைகளுக்கான தீர்விற்கு எழுத்துமூல உறுதிமொழியை மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் வழங்க வேண்டுமென்பதே பொதுவான கோரிக்கையாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஐனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ் மக்கள் கூட்டணியின் நிலைப்பாடு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.