என் போன் நம்பரை பிளாக் பண்ணி வச்சிருக்கார்.. இப்படி இருந்தா எப்படி?.. ஜோதிமணி குமுறல்

SHARE THIS NEWS please, THANK YOU
............................

என் போன் நம்பரை பிளாக் பண்ணி வச்சிருக்கார்.. இப்படி இருந்தா எப்படி?.. ஜோதிமணி குமுறல்

என் போன் நம்பரை கலெக்டர் பிளாக் பண்ணி வச்சிருக்கார். இப்படி பண்ணா, நான் எப்படி மக்கள் பிரச்சனைகளை அவருகிட்ட சொல்வேன்” என்று கரூர் எம்பி ஜோதிமணி குற்றஞ்சாட்டி உள்ளார். ஜோதிமணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்தே மாவட்ட நிர்வாகத்துடன் லடாய்தான். பிரச்சாரம் செய்யும்போது இடையூறு, கடைசிநாள் பிரச்சாரத்தை அனுமதிக்காதது, உட்பட இப்போதும் மோதல் போக்குதான் இருந்து வருகிறது. அன்று அண்ணன் செந்தில்பாலாஜி துணைக்கு இருந்த நிலையில், இன்று எம்பி யாகிவிட்ட ஜோதிமணி துணிந்து தொகுதியில் செயல்பட்டு வருகிறார். தொகுதி மக்களின் பிரச்சனைகள் குறித்த ரிப்போர்ட் எனக்கு மாசமாசம் வந்தாகணும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் சொல்லிவிடவும், அதற்கான வேலைகளில் மும்முரமாகி உள்ளார் ஜோதிமணி. இது வேறலெவல் பிசினஸ்… பிக்பாஸ் ரேட்டிங்குக்காக களமிறக்கப்பட்ட ஈழத் தமிழர்கள்! ஜோதிமணி ஆனால் குடிநீர் விவகாரம் தலைதூக்கிய நிலையில், கலெக்டரின் ஒத்துழைப்பு இல்லை என்று ஜோதிமணி குற்றஞ்சாட்டி உள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய ஜோதிமணி, “கரூர் தொகுதி முழுவதுமே குடிநீர் பிரச்சினை இருக்கிறது. ரொம்ப நாளாகவே குடிநீர் சம்பந்தமான எந்த வேலைகளையும் இங்கு மேற்கொள்ளாததே இதற்கு காரணம். பிரச்சனை கரூரில் குடிநீர்திட்ட பணிகள் ஆய்வு கூட்டத்திற்கு என்னை யாருமே கூப்பிடவில்லை.தண்ணீர் பிரச்சினை ஒரு பொதுப்பிரச்சினை. இது ஒன்றும், அதிமுக, திமுக, காங்கிரசை சேர்ந்த அரசியல் பிரச்சினை கிடையாது. அப்படி இருக்கும்போது எந்த கட்சியாக இருந்தாலும் எம்பி, எம்எல்ஏ, அமைச்சர், இப்படி எல்லாரையும் ஒருங்கிணைத்துதான் ஆய்வு கூட்டம் நடத்தணும். தகவல் இல்லை என்னை இந்த கூட்டத்திற்கு அழைக்கவே இல்லை. பாராளுமன்ற உறுப்பினரின் அதிகாரத்தை தட்டி கழிக்கும் போக்கு இது. எனக்கு மட்டுமில்லை.. தொகுதிகளிலுள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்குகூட ஒரு தகவலும் இதை பத்தி சொல்லவில்லை. நம்பர் பிளாக் தேர்தல் நேரத்தில் ஏற்பட்ட பிரச்சினையையொட்டி, என் செல்போன் நம்பரை, கலெக்டர் பிளாக் செய்துவிட்டார். எனக்கு அது அப்போவே தெரியும். இப்போ, நான் எம்பி ஆனதும் பிளாக்-ல இருந்து என் பேரை எடுத்துட்டு இருப்பார்னு பார்த்தேன். ஆனால் இன்னமும் என் நம்பர் “கால் பிளாக்”கில்தான் உள்ளது. இப்படி இருந்தால் மக்கள் சொல்ற பிரச்சனைகளை, கோரிக்கைகளை நான் எப்படி முன் வைப்பது?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.