எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை

SHARE THIS NEWS please, THANK YOU
............................

எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த வருடம் ஐந்து, ஆறு படங்கள் வெளியானது. இப்படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றதால், தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை
எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை

இவர் சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘மலையாளத்தில் நான் முதலில் அறிமுகம் ஆகியிருந்தாலும் தமிழ் சினிமாவில் நடித்ததால் தான் எனக்கு ஒரு அடையாளம் மற்றும் அங்கீகாரம் கிடைத்தது. நடிகையாக வேண்டும் என்று படிக்கும்போது இருந்தே ஆசை எதுவும் இல்லை. மாடலிங் செய்து வந்தேன். ஆனால் கடவுளின் அணுகிரகம் இருந்ததால் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்து, நடிகையாகி விட்டேன். கஷ்டப்பட்டு கடுமையாக உழைத்து இந்த நிலைமைக்கு வந்திருக்கிறேன். தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் நிறைய புதுப்புது இயக்குனர்கள் அறிமுகம் ஆகி பல்வேறு வித்தியாசமான படங்களை இயக்குகிறார்கள். படங்களை பார்க்க வரும் ரசிகர்களும் நல்ல தெளிவாகவே உள்ளனர்.

MT4 Platforms

என்னால் முடிந்த அளவுக்கு நல்ல கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன். இதற்காக கடுமையாக உழைக்கிறேன். திருமணம் செய்யும் ஆசை இப்போது இல்லை. இன்னும் நிறைய படங்களில் நடிக்க வேண்டும். நடிகர் விஜய் கூட நடித்துவிட்டேன். அஜித்குமாருடன் நடிக்க வேண்டும் என்றால் அது நடக்கும். வரும்போது பார்க்கலாம். அரசியலில் ஈடுபட வேண்டும் என்று மனதில் ஒரு துளிகூட ஆசை இல்லை’ என்றார்.

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.