SHARE THIS NEWS please, THANK YOU
............................

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சட்டவிரோத பேனர்கள் தொடர்கின்றன- நீதிபதிகள் கடும் அதிருப்தி

சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுபஸ்ரீ (23 வயது), என்ற இளம்பெண் நேற்று பல்லாவரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சாலையின் ஓரத்தில் வைத்திருந்த பேனர் சரிந்து அவர் மீது விழுந்தது. அதனால், அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது, பின்னால் வந்த தண்ணீர் லாரியில் சிக்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சட்டவிரோத பேனர்கள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்துள்ளபோதிலும், நிலைமை இன்னும் மாறவில்லை. பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைப்பது தொடர்கிறது.

MT4 Platforms

இந்நிலையில், பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், ஷேசசாயி ஆகியோர் கொண்ட அமர்வு தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:-

பேனரால் பலியான இளம்பெண்

பேனர்கள் விழுந்து உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு அதிகாரிகளின் மெத்தன போக்கே காரணம். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் விதிகளை மீறி பேனர்கள் வைப்பது தொடர்கிறது.

விதிகளை மீறி பேனர்கள் வைப்பது, அதனால் உயிரிழப்புகள் ஏற்படுவது அரசியலாக்கப்படுகின்றன. உயிரிழப்புக்கு 2 லட்சம் ரூபாய் கருணைத்தொகை தந்தால் பிரச்சினை முடிந்துவிடும் என நினைக்கிறார்கள்.

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

இளம்பெண் சுபஸ்ரீயின் மரணத்திற்கு காரணமாக இருந்த பேனரை அச்சடித்த அச்சகத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள் படிக்க :