உள்ளத்திலே நீ உறங்கு ….!

SHARE THIS NEWS please, THANK YOU
............................

உள்ளத்திலே நீ உறங்கு ….!

தூங்க நானும் பாய் விரித்தேன்
தூக்கம் வரவில்லை ….
கண்ணை மூட நினைத்தேன்
கண்ணே நீ தொல்லை …

உள்ளத்திலே வந்து நித்தம்
உள்ளுக்குள்ளே சில்மிஷம் நித்தம் ….
தடுக்க முடியா நானும் விட்டேன்
தங்கமே உன்னை காத்தேன் …..

MT4 Platforms

அழ நெஞ்சில் வேர் வைத்தவளே
அழகாய் விதி செய்தவளே …
உன்னை நானும் மறவேனா ..?
உள்ளத்திலே மிதிப்பேனா …?

தொடு வானம் வந்தாடா
தொட்டு நிலவு விளையாடா …
ஆனந்தம் பிறக்குதே
ஆள் மனது சிறக்குதே …..

இது போல ஒரு சுகந்தம்
இனி ஏது கிடைக்குமோ …?
உன் வரவால் மகிழ்ந்தேனே
உள்ளத்திலே நீ உறங்கு தேனே ….!

வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -26/03/2019

உள்ளத்திலே நீ உறங்கு ….!
உள்ளத்திலே நீ உறங்கு ….!

Leave a Reply

Your email address will not be published.