SHARE THIS NEWS please, THANK YOU
............................

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள உல்லாச விடுதியொன்றில் மர்ம குழுவினர் புகுந்து கத்தி குத்து தாக்குதல் மேற்கொண்டதில் முகாமையாளர் படுகாயமடைந்துள்ளார்.

கல்லடி நொச்சிமுனை பகுதியிலுள்ள விடுதியிலேயே இந்த சம்பவம் நேற்று நடந்தது. படுகாயமடைந்த முகாமையாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த உல்லாச விடுதியில் கடமையாற்றிய ஊழியர் ஒருவரின் செயற்பாடு காரணமாக அவரை கடந்த வாரம் கடமையிலிருந்து நிர்வாகம் அவரை நிறுத்தியுள்ளனர்.

MT4 Platforms

இதையடுத்து முகாமையாளரை கொலை செய்வதாக ஊழியர் தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்துள்ளார். இது தொடர்பாக முகாமையாளர் முறைப்பாடு செய்வதற்கு பொலிஸ் நிலையத்துக்கு சென்றபோது பொலிசார் ஒரு மணித்தியாலயத்தின் பின்னர் முறைப்பாடு தெரிவிக்குமாறு குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து முகாமையாளர் மீண்டும் ஹோட்டலுக்கு திரும்பி வந்துள்ளார். நேற்று பகல் 11 மணியளவில் பணிநீக்கப்பட்ட ஊழியர் சுமார் 8 இளைஞர்களுடன் கத்தி மற்றும் இரும்பு கம்பி, சைக்கிள் செயின் போன்ற ஆயுதங்களுடன் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களில் ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். ஹோட்டலுக்கு நுழைந்து முகாமையாளரை கத்தியால் குத்தியுள்ளனர். படுகாயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

மேலும் செய்திகள் படிக்க :