உலகத்தை சுற்றிவரும் மோடி உள்ளூர் மக்களுடன் சில நிமிடமாவது செலவிட்டுள்ளாரா? – பிரியங்கா

உலகத்தை சுற்றிவரும் மோடி உள்ளூர் மக்களுடன் சில நிமிடமாவது செலவிட்டுள்ளாரா? – பிரியங்கா

பாராளுமன்ற தேர்தலின் முதல் கட்டம் கடந்த 11ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஆட்சியை தக்கவைக்க பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரசும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரியான பிரியங்கா காந்திக்கு அக்கட்சியில் பொது செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கிழக்கு பகுதி தேர்தல் பொறுப்பாளராக நியமனம் செய்யப்ப்ட்டு உள்ளார்.

MT4 Platforms

இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக பிரியங்கா காந்தி இன்று அசாம் மாநிலம் சென்றார். அவரை காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாக வரவேற்றனர்.

இதையடுத்து, அசாம் மாநிலம் சிலிசார் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரியங்கா காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

பிரதமர் நரேந்திர மோடி உலகம் முழுவதும் சுற்றி வருகிறார். ஆனால் அவர் வாரணாசியில் உள்ள எந்த குடும்பத்தினருடன் சில நிமிடங்களாவது தங்கியுள்ளாரா?

உலகத்தை சுற்றிவரும் மோடி உள்ளூர் மக்களுடன் சில நிமிடமாவது செலவிட்டுள்ளாரா? - பிரியங்கா
உலகத்தை சுற்றிவரும் மோடி உள்ளூர் மக்களுடன் சில நிமிடமாவது செலவிட்டுள்ளாரா? – பிரியங்கா

இன்று மகா புருஷர் அம்பேத்கர் பிறந்த தினம். அரசியலமைப்பை உருவாக்கியவர். அனைத்து தலைவர்களும்
அரசியலமைப்புக்கு உரிய மரியாதை அளித்து வருகின்றனர். ஆனால், தற்போது அரசியலமைப்பை அழிப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.