உயிர் தின்ற கடலே — உனை சபித்தேன் நானே …!

ஓடி வந்தெங்கள் உயிர் தின்ற கடலே
ஒரு பதில் சொல்லாமல் உள் வந்த தென்ன ..?
தேடி பொருள் தேட மடி தந்த கடலே
தேய் கூலி இழக்கத்தான் சேதங்கள் தந்தாயோ …?

உயிர் தின்ற கடலே -- உனை சபித்தேன் நானே …!
உயிர் தின்ற கடலே — உனை சபித்தேன் நானே …!

பேரலை உருட்டி எம் பெரு வீடு உடைத்தாயே
ஆழ்ந்து உறங்கியார் அவர் வந்து தின்றாயே ….
உயிர் தின்ற கடலே உன் கோபம் என்ன …?
உடைந்து உடல் வாழ துயர் தந்ததென்ன …?

ஆடி பாடிய அழகான ஊருக்குள்
ஆழி பேரலையே அவை வந்ததென்ன …?
நேற்றெந்தன் பிள்ளைக்கு நான் செய்த பண்டங்கள்
இன்று படைக்கத்தான் எமனாக வந்தாயோ …?

கத்தி வாய் குழற கை தட்டும் கடலே
கடும் கோபம் உன் மேலே என் செய்வான் நானோ ..?
உன்னை தாய் என்றார் உதடுகள் சாகட்டும்
உன்னரு வாழ நான் வர மாட்டேனே ….!

வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -24/12/2018

Related Post