உணவில் நச்சு இருப்பதனை கூறும் அறிகுறிகள்

உணவில் நச்சு இருப்பதனை கூறும் அறிகுறிகள்

உணவில் நச்சு இருந்தால் வயிற்றுப்போக்கும், வாந்தியும் மட்டுமே ஏற்படும் என எண்ண வேண்டாம். அதிகம் வியர்த்துக் கொட்டுவது கூட உணவு ஒவ்வாமையின் ஆரம்ப அறிகுறியாக இருக்கக் கூடும்.

easy way earn money click here,greate account

உணவில் நச்சு இருப்பதனை கூறும் அறிகுறிகள்
உணவில் நச்சு இருந்தால் வயிற்றுப்போக்கும், வாந்தியும் மட்டுமே ஏற்படும் என எண்ண வேண்டாம். அதிகம் வியர்த்துக் கொட்டுவது கூட உணவு ஒவ்வாமையின் ஆரம்ப அறிகுறியாக இருக்கக் கூடும்.

 • வயிற்று பிடிப்பு, உப்பிசம், காற்று, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் ஏதோ தவறான உணவினை நீங்கள் எடுத்துக் கொண்டுள்ளீர்கள் என்பதைக் காட்டுகின்றன.
 • வயிற்றுப் பிரட்டல், வாந்தி இவை இருக்கும்.
 • 1-8 மணி நேரம், 12-72 மணி நேரம் சென்றும் கூட அறிகுறிகள் வெளிப்படலாம்.
 • ஜூரம் இருக்கலாம்.
 • எதிலும் கவனம் செலுத்த முடியாது.
 • உடலில் நீர் வற்றுதல்

போன்ற அறிகுறிகள் ஏற்படும் பொழுதே உடனடி கவனம் செலுத்தினால் பாதிப்பிலிருந்து எளிதில் நிவாரணம் பெறலாம்.

 • கைகளை சாப்பிடும் முன்பும், பின்பும் சுத்தமாகக் கழுவுங்கள்.
 • வீட்டில் சமைத்த உணவுகளையே சாப்பிடுங்கள்.
 • வீடு, குறிப்பாக சமையலறையை மிகவும் சுத்தமாக வைத்திருங்கள்.
 • முறையாக சமைக்காத அசைவ உணவு குடலில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தலாம். கவனம் தேவை.
 • மீந்து போன அசைவ உணவுகளில் அதிக கிருமிகள் பாதிப்பு ஏற்படலாம்.
 • காய்ச்சாத பச்சை பாலினை பயன்படுத்த வேண்டாம்.
 • பச்சை முட்டை, பச்சை மீன் இவை குடலுக்கு பாதிப்பினை ஏற்படுத்தலாம்.
 • நன்கு கழுவப்படாத பழங்கள், காய்கறிகள் ஆபத்தானதே.
 • முளை கட்டிய பயிரினை கூட ஆவியில் வேக வைத்து சாப்பிடுவது நல்லது.

வாழைப்பழம் என்றவுடன் பல வகை வாழைப்பழங்கள் வகையினைப் பற்றி நாம் நினைப்போம். உண்ணும் பழக்கம் உள்ளது. செவ்வாழைப் பற்றி அரிந்து கொண்டால் நாம் செவ்வாழையினையும் அடிக்கடி உண்ண ஆரம்பிப்போம்.

 • செவ்வாழை நிறைந்த நார் சத்து கொண்டது. மலக்சிக்கல் செரிமான கோளாறு, வயிற்றில் காற்று இவற்றினை நீக்கும் தன்மை கொண்டது. இருதய பாதிப்பு, சர்க்கரை நோய் பிரிவு 2 பாதிப்பு இவைகளை தவிர்க்கும் தன்மை கொண்டது.
 • சிறு நீரக கற்கள் உருவாவதைத் தவிர்க்கும்.
 • எலும்பு ஆரோக்கியத்தினைக் கூட்டும்.
 • வைட்டமின் சி சத்து அதிகம் கொண்டதால் நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
 • அதிக கலோரி சத்து இல்லாததால் எடை குறைப்பிற்கு உதவும்.
 • வைட்டமின்கள் அதிகம் கொண்டதால் ரத்த விருத்தி, சிகப்பு அணுக்கள், ஹீமோ குளோபின் இவற்றுக்கு பெரிதும் உதவும்.
 • உடனடி சக்தி அளிக்க வல்லது.
 • சிகரெட் பழக்கத்தினை நிறுத்தும் பொழுது செவ்வாழை எடுத்துக் கொள்வது உடல், மன நலத்தினை பாதுகாக்கும்.
 • நெஞ்சு எரிச்சல் உடையவர்கள் செவ்வாழையினை தினமும் எடுத்துக் கொள்ளலாம்.
 • மூல நோய்க்கும் சிறந்தது.
 • ஸ்ட்ரெஸ் பாதிப்பு உடையவர்கள் செவ்வாழை எடுத்துக்கொள்ள நல்ல நிவர்த்தி கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published.