SHARE THIS NEWS please, THANK YOU
............................

அமைச்சர் ரவூப் ஹக்கீமின் திருமணத்திற்கு கொழும்பு வந்த, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மீனவர் விவகாரம் குறித்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார்.

கொழும்பிலுள்ள விவசாய அமைச்சில் நேற்று (12) மாலை இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இலங்கை சார்பில் கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலிப், இராஜாங்க அமைச்சர் அமீர் அலி, இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா, அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் இந்த கலந்துரையாடலில் கலந்துக் கொண்டிருந்தனர்.

MT4 Platforms

இதன்போது கருத்து தெரிவித்த கனிமொழி, “இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை நிறுத்தியுள்ள போதிலும், சில சந்தர்ப்பங்களில் சில அசம்பாவித சம்பவங்கள் இடம்பெறுவதாகத் தமிழக மீனவர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்” எனவும் கூறியிருந்தார்.