SHARE THIS NEWS please, THANK YOU
............................

யாழ்ப்­பா­ணம்,  வல்­வெட்­டித்­துறை, ஊரிக்­காடு இரா­ணு­வத்­தி­ன­ரின் சிற்­றுண்­டிச் சாலை­யில் கட­மை­யி­லி­ருந்த இரா­ணு­வத்­தி­ன­ரு­டன் வாய்த்­தர்க்­கத்­தில் ஈடு­பட்ட இளை­ஞர்­கள் மூவர், கத்தி வைத்­தி­ருந்­த­னர் என்ற குற்­றச்­சாட்­டில் கைது செய்­யப்­பட்டு பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ள­னர்.

இதன் பின்­னர் அந்­தப் பகு­தி­யில் இரா­ணு­வத்­தி­னர் பொல்­லு­க­ளு­டன் வீதி­க­ளில் நின்று சோத­னை­யில் ஈடு­பட்­ட­தால் மக்­கள் பதற்­ற­ம­டைந்­த­னர்.

இரா­ணு­வச் சிற்­றுண்­டிச்­சா­லை­யில் பொருள்­க­ளைக் கொள்­வ­னவு செய்ய முற்­பட்ட இளை­ஞர்­க­ளுக்­கும் இரா­ணு­வத்­தி­ன­ருக்­கும் இடை­யில் நேற்­று­முன்­தி­னம் வெள்­ளிக்­கி­ழமை இரவு 7.30 மணி­ய­ள­வில் முரண்­பாடு ஏற்­பட்­டுள்­ளது. இரா­ணு­வத்­தி­ன­ரு­டன் முரண்­பட்ட இளை­ஞர்­கள் உந்­து­ரு­ளி­யில் அங்­கி­ருந்து புறப்­பட்­டுச் செல்ல முற்­பட்­ட­போது, அவர்­களை இரா­ணு­வத்­தி­னர் கைது செய்­த­னர். அவர்­க­ளி­டம் கத்தி இருந்­த­தா­கத் தெரி­வித்து பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைத்­த­னர்.

MT4 Platforms

இளை­ஞர்­க­ளி­ட­மி­ருந்து இரண்டு சிறிய கத்­தி­களை மீட்­ட­தா­கப் பொலி­ஸார் கூறு­கின்­ற­னர். அவை இரா­ணு­வத்­தி­னர் பயன்­ப­டுத்­தும் கத்­தி­க­ளைப் போன்று இருந்­தாக பொலிஸ் வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.

கைது செய்­யப்­பட்ட இளை­ஞர்­களை நீதி­வா­னின் இல்­லத்­தில் நேற்று முற்­ப­டுத்­தி­ய­போது அவர்­களை எதிர்­வ­ரும் 21 ஆம் திகதி வரை­யில் விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கு­மாறு நீதி­வான் உத்­த­ர­விட்­டார்.

இந்த முரண்­பாடு இடம்­பெற்ற பின்­னர் ஊரி­யான் இரா­ணுவ முகாம் பகு­தி­யில் கடும் வீதிச் சோத­னை­யில் இரா­ணு­வத்­தி­னர் ஈடு­பட்­ட­னர். இரா­ணு­வத்­தி­னர் கைக­ளில் கொட்­டன்­கள், பொல்­லு­களை வைத்­தி­ருந்­தாக மக்­கள் தெரி­வித்­த­னர். இத­னால் அந்­தப் பகு­தி­யில் பதற்­றம் நில­வி­யது.