இரண்டு வருடத்தில் தீர்வு-யாழில் வைத்து ரணில் தெரிவிப்பு…!

SHARE THIS NEWS please, THANK YOU
............................

இன்னும் இரண்டு வருடங்களிற்குள் இனப்பிரச்சனைக்கான தீர்வை தாம் வழங்குவதாக பிரதமர் ரணில் விக்கிரம சிங்க யாழ் ஸ்கந்தவரோதய கல்லூரியில் இடம்பெற்ற 125வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,உண்மையில், 2015ம் ஆண்டுக்குப் பிறகு, இனங்களுக்கிடையிலான ஒருமைப்பாடு அதிகமாகியுள்ளது என்றுதான் கூறவேண்டும். அத்தோடு, அரசியல் தீர்வை பெற்றுக்கொடுக்கவும் நாம் தயாராகவே இருக்கிறோம் என்பதை இங்கு கூறிக்கொள்கிறேன்.

ஆனால், துரதிஸ்டவசமாக நாடாளுமன்றில் எமக்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் அதனை துரிதமாக மேற்கொள்ள எம்மால் முடியாமல் உள்ளது.

MT4 Platforms

எனினும், இவ்விடத்தில் நான் ஒன்றைக் கூறிக்கொள்ள வேண்டும். அதாவது நானும் எனதுக் கட்சியும் அதிகாரப் பரவலாக்கலை மேற்கொள்ளத் தயாராகவே இருக்கிறோம்.

சிங்களவர்கள், முஸ்லிம்களுக்கு பாதிப்பேற்படுத்தாத வகையிலான அதிகாரப்பரவலாக்கலை வழங்குவது தொடர்பாக, நாம் எந்தத் தரப்பினருடனும் பேசத்தயராகவே இருக்கிறோம்.

இன்னும், இரண்டு மூன்று வருடங்களில் இதனை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் எமது நோக்கமாக இருக்கிறது.

மாகாண ரீதியாக மட்டுமன்றி, உள்ளுராட்சி ரீதியாகவும் அதிகாரப் பரவலாக்கலை வழங்கி, ஸ்தீரமான அரசியல் தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இது நிச்சயமாக இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்குள் நடைபெறும் என்பதையும் நான் உறுதியாகக் கூறிக்கொள்கிறேன். இது நிறைவேறிய பிறகு நாம் அனைவரும் இலங்கையர் என்ற அடையாளத்துடன் பெருமையாக வாழ முடியும்“ என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :

Leave a Reply

Your email address will not be published.