SHARE THIS NEWS please, THANK YOU
............................

இனியும் தென்னிலங்கையிலிருந்து இளைஞர் யுவதிகள் வடக்கிற்கு அரச வேலைவாய்ப்பிற்காக அனுப்பப்படுவார்களேயானால் தாங்கள் மாற்று முடிவு எடுக்க வேண்டி வரும் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் அரசினை எச்சரித்துள்ளார்,

நீண்ட காலமாக வடக்குப் பகுதிக்கு தென்னிலங்கையைச் சேர்ந்த இளைஞர்கள் அரசாங்க வேலைவாய்ப்புக்காக அனுப்பப்பட்டு வருகின்றார்கள் இது தொடர்பில் நீண்ட காலமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையிலும் தொடர்ச்சியாகவும் தென்னிலங்கையைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் வடக்கிற்கு வேலைவாய்ப்புக்காக அனுப்பப்படுகிறார்கள் இது தொடர்பில் அண்மையில் நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தின் போதும் அவைத் தலைவர் சி வி கே சிவஞானம் இது தொடர்பில் சுட்டிக்காட்டிய போதும் அந்த விடயம் தொடர்பில் பிரதமர் எந்த கருத்தும் தெரிவிக்காதுமௌனமாக இருந்த நிலையில் சிவி கே சிவஞானம் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்