SHARE THIS NEWS please, THANK YOU
............................

இந்திய பாடல்களுக்கு நிகரான ஈழத்துப் பாடல் “என் மனசுப் பூவே”.

ஈழத்துக் கலைஞர்களிடம் இருந்து கால மாற்றங்களுக்கு ஏற்றால் போல் கலைப் படைப்புகள் வெளிவருகின்றனவோ என்று எண்ணத் தோன்றுகின்றது. குறும்படங்களில் அதிக ஈடுபாட்டுடன் இருந்த எமது கலைஞர்கள் தற்போது பல பாகங்களில் இருந்தும் பாடல்களை வெளியிட்டு வருகின்றனர்.

அதிகமான சிறந்த பாடல்களை வெளியிடுவதில் சுபர்த்தனா படைப்பகம் முன்னிலை வகிக்கின்றது. ஈழத்தில் உள்ள சிறந்த இசையமைப்பாளர்களின் இசையில் தொடர்ச்சியாக பாடல்கள் வெளிவருகின்றன.

இன்று இசையமைப்பாளர் பிரதா கந்தப்பு அவர்களின் இசையில் “என் மனசுப் பூவே” பாடல் வெளிவந்துள்ளது. இவருடைய இசையில் வெளிவந்த முதல் பாடலையும் நாம் வெளியிட்டு ஆதரவினை வழங்கியிருந்தோம்.

MT4 Platforms

இந்த புதிய துள்ளல் பாடலை நிச்சயமாகக் கவனம் கொள்ள வேண்டும். இந்தப் பாடலைக் கேட்டதுமே இது ஈழத்துக் கலைஞர்களின் பாடலா? அல்லது இந்தியத் திரைப்பட பாடலா? என்ற ஒரு குழப்பம் ஏற்பட்டது. ஏனென்றால் சிறப்பாக இசையமைக்கப்பட்டு தரமான ஒலிக்கலவையுடன் பாடல் வெளிவந்துள்ளது.

ஈழத்தில் இருந்து வெளிவந்த முந்தைய துள்ளல் பாடல்கள் பழைய பொப்பிசை பாடல்களின் புள்ளிகளிலும், ஒன்றை ஒன்று தழுவிய நிலையிலுமே வெளிவந்திருந்தன. இங்கே இந்தப் பாடல் இந்திய பாடல்களுக்கு இணையான தரமான பாடலாக வெளிவந்துள்ளது.

இசையமைப்பாளர் ஒரு பெண். இவருடைய இசையில் வெளி வந்த இரு பாடல்களுமே மிகவும் சிறப்பானவை. ஒரு தடவை கேட்டவர்கள் மீண்டும் ஒரு தடவை கேட்காமல் கடந்து போக முடியாது. அவற்றில் இந்த துள்ளிசை பாடலானது ஈழத்து இசைத்துறையில் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இசையமைப்பாளர் பிரதா கந்தப்பு அவர்கள் இசை துறையில் சாதனைகள் படைப்பார் என்பது தெள்ளத் தெளிவாகின்றது. தொடர்ந்து இது போன்ற பாடல்கள் வெளிவர வேண்டும் என்று வாழ்த்துகின்றோம்.

More from my site 00447536707793 வன்னி மைந்தன்