இணக்கப்பாடு இன்றி முடிவடைந்தது பெருந்தோட்ட
தொழிலாளர்களின் சம்பள பேச்சுவார்த்தை

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை இன்று 10.01.2019 கொழும்பு நாரஹென்பிட்டியில் அமைந்துள்ள தொழில் திணைக்கலத்தின் தொழில் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது

இணக்கப்பாடு இன்றி முடிவடைந்தது பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பேச்சுவார்த்தை
இணக்கப்பாடு இன்றி முடிவடைந்தது பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பேச்சுவார்த்தை
இணக்கப்பாடு இன்றி முடிவடைந்தது பெருந்தோட்ட   தொழிலாளர்களின் சம்பள பேச்சுவார்த்தை
இணக்கப்பாடு இன்றி முடிவடைந்தது பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பேச்சுவார்த்தை

இந்த பேச்சுவார்த்தையின் முதற் கட்டமாக தொழில்¸ தொழில் உறவுகள் மற்றும்; சமூகவலுவூட்டல் அமைச்சர் தயாகமகே அவர்களுக்கும் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க அவர்களுக்கும் 22 தோட்டகம்பனிகளின் நிறைவேற்று அதிகாரிகளுக்கும் இடையில் காலை 11.00 முதல் 12.00 மணிவரை நடைபெற்றது.

இந்த கலந்துறையாடலில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மூன்று வருடகால சம்பள அதிகரிப்பு ஒப்பந்ததிற்கு முன்வந்து முதல் வருட சம்பள அத்கரிப்பு 625.00 ரூபாவும் இரண்டாம் வருடம் சம்பள அத்கரிப்பு 650.00 ரூபாவும் மூன்றாம் வருடம் சம்பள அதிகரிப்பு 675.00 ரூபா அதிகரிப்பதாகவும் ஊக்குவிப்பு தொகை 140.00 ரூபாவும் 80.00 ரூபா வரவு கொடுப்பனவும் 30.00 விலைகொடுப்னவும் மேலதிகமாக எடுக்கும் கொழுந்திற்கு கிலே ஒன்றுக்கு 45.00 ரூபாவும் வழங்க முன் வந்தன. இதனை தொடர்ந்து கலந்துறையாடல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

இரண்டாம் கட்டமாக 12.00 மணி முதல் 1.30 வரை கூட்டு ஒப்பந்த்தில் கைசாத்து இடும் தொழிற் சங்கங்களுக்கும் தொழில் உறவுகள் மற்றும்; சமூகவலுவூட்டல் அமைச்சருக்கும் கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க அவர்களுக்கும் இடையில் நடைபெற்றது. இதன் போது இரு அமைச்சர்களினாலும் பெருந்தோட்ட கம்பனிகளிடம் பேசி முடிவு எடுக்கபட்ட விடயங்களும் தீர்மாணங்களும் முன் வைத்தனர். இதனை பரீசிலித்து பார்த்த தொழிற்சங்கங்களில் முடிவுகள் இன்றி தொழிலாளர்களிடம் கேட்டு அவர்களின் முடிவுபடி மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருவதாக கூறி எழும்பி சென்றனர்.

இந்த ஒப்பந்தத்தில் கைசாத்து இடும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் கைதொழில் இராஜாங்க அமைச்சருமான வடிவேல் சுரேஸ்; அவர்களுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்ப்pனருமான ஆறுமுகன் தொண்டமான்; கூட்டு தொழிற்சங்கங்களின் தலைவர் எஸ். ராமநாதன் உட்பட முன்னால் அமைச்சரும் இ.தொ.கா போசகருமான முத்து சிவலிங்கம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் அனுசா சிவராஜா இ.தொ.கா உப தலைவர்களான சட்டதரணி கா. மாரிமுத்து எம்¸ ராமேஸ்வரன்¸ இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி.விஜயகுமாரன் இ.தொ.கா வின் உதவி பொது செயலாளர் ஆறுமுகன் ஜீவன் தொண்டமான் உட்பட கூட்டு தொழிற்சங்கங்களின் சங்கத்தின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

MT4 Platforms

Related Post