SHARE THIS NEWS please, THANK YOU
............................

கொத்மலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெதமுல்ல தோட்டம் லிலிஸ்லேன்ட் பிரிவில் உள்ள ஆற்றுப்பகுதியில் இளைஞன் ஒருவர் இன்று (10) காலை தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வெதமுல்ல தோட்டத்தில் மேற்படி இளைஞன் அவரது பயிர்செய்கையை பார்வையிட்டு வீடு திரும்பும் சந்தர்ப்பத்திலேயே குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

தவறி விழுந்த இளைஞனை உடனடியாக நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

MT4 Platforms