அவல் பாயாசம் செய்வது எப்படி?

அவலில் புட்டு, உப்புமா செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று அவல் வைத்து சூப்பரான பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த பாயாசம் செய்வது மிகவும் சுலபம்.

அவல் பாயாசம் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் :

கெட்டி அவல் – 1/2 கப்
வெல்லம் – 1/4 கப்
பால் – 2 கப்
ஏலக்காய் – 1
முந்திரிப்பருப்பு – 5
நெய் – 2 தேக்கரண்டி
உப்பு – ஒரு சிட்டிகை

செய்முறை :

வாணலியில், நெய் ஊற்றி, முதலில் முந்திரியை பொன்னிறமாக, மிதமான தீயில் வறுத்து, தனியே எடுத்து வைக்கவும்.

அதே நெய்யில் அவலை போட்டு பொரிந்து லேசாகும் வரை வறுக்கவும்.

பாலை ஒரு கனமான பாத்திரத்தில் ஊற்றி காய்ச்சவும்.

பால் நன்றாக கொதித்து சுட்டி வரும் போது வறுத்த அவல், மற்றும் உப்பு சேர்த்து, மிதமான தீயில் பால் வற்றி, அவல் வேகும் வரை வைக்கவும்.

1/2 கப் தண்ணீரில் வெல்லத்தை போட்டு சூடு செய்யவும். வெல்லம் கரைந்தவுடன், வடிகட்டி, வெந்த அவலில் சேர்த்து கலக்கவும்.

ஏலக்காய், முந்திரி சேர்த்து கலந்து இறக்கவும்.

வெல்லம் சேர்த்த பிறகு, 1 நிமிடத்தில் பாயசத்தை இறக்கிவிடவும். கொதிக்க வைக்க வேண்டாம்.

சூப்பரான அவல் பாயாசம் ரெடி.

அவல் பாயாசம் செய்வது எப்படி?
அவல் பாயாசம் செய்வது எப்படி?

கவனத்திற்கு

அவல் நன்கு வெந்தவுடன் தான் வெல்லம் சேர்க்கவேண்டும். வெல்லம் சேர்த்த பின் அவல் வேகாது.

MT4 Platforms

Related Post