அரசாங்க நிறுவன வளாகங்களுக்குள் வெற்றிலை மெல்வதும் புகைப்பதும், வெற்றிலை அல்லது சிகரெட் போன்றவற்றை விற்பனை செய்வதும் தடைசெய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதுதொடர்பாக நேற்றை அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெற்றிலை புகையிலை மற்றும் பாக்குடன் தொடர்புபட்ட தயாரிப்பின் காரணமாக வாய்புற்று நோய் ஏற்படக்கூடிய நிலைமையை கவனத்திற் கொண்டு அரச நிறுவனங்களில் அலுவலக பணியாளர் மற்றும் அந்த நிறுவனங்களுக்கு வருகைத் தரும் பொதுமக்கள் மற்றும் நிறுவன வளவில் வெற்றிலை புகையிலை மற்றும் பாக்கு உள்ளிட்ட தயாரிப்பை பயன்படுத்துவதை தடுப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அரச நிலையங்களில் வெத்திலை போட தடை

இதற்கமைவாக இதற்கான ஒழுங்கு விதிகளை மேற்கொள்வதற்காக அரச நிர்வாக சுற்று நிருபத்தை வெளியிடுவதற்காக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்திய துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

MT4 Platforms

Related Post