அட்லி மீது புகார் அளித்த துணை நடிகை

அட்லி மீது புகார் அளித்த துணை நடிகை

அட்லி தற்போது விஜய்யை வைத்து ‘தளபதி 63’ படத்தை இயக்கி வருகிறார். இதில் நயன்தாரா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் கதிர், ஜாக்கி ஷெராப், இந்துஜா, யோகி பாபு, விவேக், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

easy way earn money click here,greate account
அட்லி மீது புகார் அளித்த துணை நடிகை
அட்லி மீது புகார் அளித்த துணை நடிகை

பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. விஜய் இதில் கால்பந்தாட்ட பயிற்சியாளர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

சென்னை ஈவிபி ஸ்டுடியோவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு இதன் படப்பிடிப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அட்லி மீது துணை நடிகை கிருஷ்ண தேவி போலீசில் புகார் அளித்துள்ளார்.

அவர் அளித்த புகார் மனுவில், ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வரும் அட்லியின் திரைப்படத்தில் பணிபுரிய வந்தேன். வேலை செய்து கொண்டிருக்கும் போது, அட்லியும் அவரது உதவியாளர்களும் என்னை தகாத வார்த்தைகளில் பேசி வேலை செய்ய விடாமல் வெளியே அனுப்பி விட்டார்கள். எனவே அட்லி மற்றும் அவரது உதவியாளர்களை விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published.