அக்னி தேவி படத்திற்கு நீதிமன்றம் தடை

அக்னி தேவி படத்திற்கு நீதிமன்றம் தடை

ஜிகர்தண்டா, பேட்ட உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பாபி சிம்ஹா. இவர் டைரக்டரும், தயாரிப்பாளருமான கோவையைச் சேர்ந்த ஜான்பால்ராஜ் மீது, ‘அக்னி தேவி’ படத்திற்கு தடை கோரியும் பரங்கிமலை போலீஸ் துணை கமி‌ஷனர் முத்துசாமியிடம் புகார் மனு அளித்தார்.

அதில், கடந்த ஆண்டு கோவையைச் சேர்ந்த ஜான் பால்ராஜ் என்பவர் இயக்கி, தயாரித்த ‘அக்னி தேவ்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி 5 நாட்கள் நடித்தேன். என்னிடம் கூறிய கதைப்படி எடுக்காமல் வேறு கதையில் படம் எடுக்கப்பட்டதால் நான் தொடர்ந்து நடிக்கவில்லை.
மேலும் ஏற்கனவே நடித்த காட்சிகளை போட்டு காண்பிக்க மறுத்ததால் ஏற்பட்ட பிரச்சினையால் அந்த படத்தில் இருந்து விலகினேன்.

MT4 Platforms

இது தொடர்பான வழக்கு கோவை சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், ‘அக்னி தேவ்’ படத்தின் பெயரை ‘அக்னி தேவி’ என்று மாற்றி 22-ந் தேதி வெளியிட திட்டமிட்டு உள்ளனர்’ என்று புகார் மனுவில் கூறியிருந்தார்.

பாபி சிம்ஹா அளித்த புகாரின் பேரில், அக்னி தேவி என்ற படத்திற்கும் தனக்கும் எந்த ஒப்பந்தமும் ஏற்படவில்லை என்றும், தான் அக்னி தேவ் படத்தில் நடித்த சில காட்சிகளை வைத்து மோசடியாக தனது முகத்தை வைத்தும், குரல் மாற்றம் செய்தும் டிரைலர் வெளியிட்டது சம்பந்தமாக டைரக்டர் ஜான்பால்ராஜ் மீது நந்தம்பாக்கம் போலீசார் மோசடி, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட (குற்ற எண் 406, 420, 469, & 470) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அக்னி தேவி படத்திற்கு நீதிமன்றம் தடை
அக்னி தேவி படத்திற்கு நீதிமன்றம் தடை

இந்நிலையில், இது தொடர்பாக பாபி சிம்ஹா நீதிமன்றத்தில் ‘அக்னி தேவி’ படத்திற்கு தடை கோரினார். அதன்பேரில், கோவை மாவட்ட முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்றம் இயக்குனரும் தயாரிப்பாளருமான ஜான் பால்ராஜ் ‘அக்னி தேவி’ படத்தினை வெளியிட ‘ஸ்டேட்டஸ்கோ’ 20/03/19 அன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், படத்தினை வெளியிடுவதில் உள்ள உண்மைத் தன்மையை கண்டறிய நீதிமன்ற ஆணையாளராக வழக்கறிஞர் திருமதி. எம்.கார்த்திகா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற ஆணையாளர் அறிக்கையினை சமர்ப்பித்து நீதிமன்றம் மறு உத்தரவினை பிறப்பிக்கும்வரை, மேற்படி படத்தினை வெளியிடுவதில் முன்பிருந்த நிலையே தொடரும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published.